இதனைத் தொடர்ந்து, தனியார் அரங்கில் நடைபெற்ற ரத்ததான முகாமை, தஞ்சை மாவட்ட திமுக பொறுப்பாளர் சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். பின்னர், கொரடாச்சேரி பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ–மாணவியர்களுக்கு தலா அரைப் பவுன் தங்க நாணயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மதிவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, 10 மேல் கரை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கும் நிகழ்வை, திமுக துணைக் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் அன்பழகன் தொடங்கி வைத்தார். மேலும், வெட்டாற்று பாலம் பகுதியில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் குமார் தலைமையில், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லை ஒட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதேபோன்று, திருவாரூர் அருகே உள்ள காட்டூர் முதியோர் இல்லம் மற்றும் அம்மையப்பன் முதியோர் இல்லங்களில், முதியோருக்கு போர்வை மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டு, பின்னர் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட அவை தலைவர் தன்ராஜ், ஒன்றிய–நகர–பேரூர் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment